"டயானா மரணமும்
கிளிண்டனின் காதல் லீலைகளும்"
பஞசாயத்து தொலைக்காட்சியில்
பார்த்தபின் விவாதமாம்
டீக்கடை பெஞ்சுகளில்
முதிர்ந்த கரும்பு காய்ந்து கருக
ஆலை திறக்குமா
நிலுவை கிடைக்குமா
இருள் சூழ் மர்மமாயிற்று
கழிப்பறைக்கு வழியற்று
ஒழுங்கிகளில் புதர் தேடும் பெண்கள்
"பிரியங்கா அப்படியே பாட்டி ஜாடை"
துணி மழித்து உட்கார்ந்தபடி
பேசிக்கொண்டார்கள்
வீட்டுக்கொரு தொலைக்காட்சி பெட்டி
லட்சியமான போது
மருங்கூருக்குள் வந்துவிட்டது உலகம்
உலகத்துக்கு தான் கவலையில்லை
மருங்கூர் பற்றி
கரிகாலன் - புலன் வேட்டை -
தொலைக்காட்சி பெட்டி
Labels: கவிதைகள்