ஆராரோ ஆராரிராரோ
ஆரோ ஆராரிராரோ
கண்ணே நீ உறங்கு
ஆரிரோ ஆராரோ
காணே மயில் உறங்கு
ஆரிரோ ஆராரோ
பசும் பொண்ணே……… நீ உறங்கு
பூவரசு வந்து உறங்கு
யாரடிச்சு நீ அழுத
அடிச்சார சொல்லி அழு
மாமன் அடிச்சானோ
மல்லிக்கை பூ செண்டாலே
அத்தை அடிச்சாலோ
அரளி பூ செண்டாலே
அடிச்சாரை சொல்லி அழு
ஆக்கினைகள் செஞ்சு வைப்போம்
யாரும் அடிக்கவில்லை
ஐவிரலும் சீண்டவில்லை
தானே அழுகுறாண்டி
தனக்கு ஒரு துணை வேண்டுமுனு
ஆராரோ ஆராரிராரோ
ஆரோ ஆராரிராரோ
தாலாட்டு பாடல்
Labels: நாட்டுப்புறவியல்