சலனமற்றுக் கிடக்கிறது
உப்புக்கடல்
துணுக்களவு மேகமுமின்றி
நீலமாய் கனல்கிறது
வானம்
தீராத விடாயில்
திசையெங்கும் வாய்விரித்து
தவிக்கிறது வேர்
கொடியில் வழியும் நிணத்தை
சுமக்கும் காற்று
எரித்தழிக்கிறது வண்ணத்துப்பூச்சிகளை
இன்று மாலை
உதிர்ந்துவிடப்போகும்
ஒற்றைப்பூவில் மட்டும்
குளிர்ந்து கிடக்கிறது
துளியளவு தேன்.
-- தூரன் குணா
சலனமற்றுக் கிடக்கிறது உப்புக்கடல்
Labels: கவிதைகள்