மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள்

எர்னஸ்டோ சேகுவெராவின் மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள் நூலில், 'காதல்' பற்றிய ஒரு நாட்குறிப்பிலிருந்து........

அவளுக்கும் எனக்கும் இடையில்தான் இழுபறி போராட்டம். வெற்றியடைந்து விட்டதாக நினைத்தவாறே அங்கிருந்து நான் கிளம்பிய அக்கணத்தில் ஓட்டிரோ சில்வாவின் (வெனிசூலாவை சேர்ந்த இடதுசாரிக் கவிஞர்) கவிதை என் காதுகளில் ஒலித்தது.

படகில்
நீரில் அலையும் ஈரக்கால்கள்
பசியால் மங்கும் முகங்கள்
அவளுக்கும் விதிக்கும் இடையிலான ஊசலாக
என் இதயம்
அவள் கண்களிலிருந்தும்
அவள் கைகளிலிருந்தும்
என்னைப் பிரித்தது எது
துயரத்தை கண்ணீர் மறைக்க
பெய்யும் மழைக்கும்
ஜன்னலுக்கும் அப்பால்
அவள் நிற்கிறாள்
'இரு, நானும் உன்னுடன் வருகிறேன்' என்று
சொல்ல முடியாமல்.

அலைகளால் அடித்து வரப்பட்டு கரையில் ஒதுங்கிய ஒரு மரக்கட்டைக்கு, 'நான் கரையில் ஒதுங்குவதில் வெற்றிபெற்று விட்டேன்' என்று கூறுவதிற்கு உரிமையுண்டா என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை.

- சேகுவெரா
மொழிபெயர்ப்பு : எஸ்.பாலச்சந்திரன்
நன்றி : டைகர் செந்தில்நாதன், புத்தரச்சல்.