ஒரு அன்பரின் மின் மடல் வினவல்

நண்பர் சதீஸ் அவர்களுக்கு,உங்களது பதிவில் அறிமுகம் பகுதியில் இருந்து DRCET பற்றிய குறிப்பை எனது பதிவில் வெளியிட உங்களது அனுமதி தேவை.
அன்புடன்
வேளராசி.

எனது பதில் :

தாராளமாக நண்பரே.... எடுத்துக் கொள்ளுங்கள்.

உலகையே தன் வீரத்துக்கு அடிமையாக்கின மாவீரன் அலெக்சாண்டருக்கு 33 வயதிலேயே முடிவு வந்தது. தன் வாழ்வின் இறுதிக் கட்டம் என்று புரிந்து கொண்ட அந்த மாமன்னன் சொன்னான்  " நகர வீதிகளில் என் பிணத்தை சவப்பெட்டியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது பெட்டியை மூடாமல் என் இரண்டு கைகளையும் விரித்து வைத்த நிலையில் எடுத்துச் செல்லுங்கள். உலகம் முழுவதையும் வெற்றி கொண்ட இந்த அலெக்சாண்டர், போகும்போது தன்னோடு எதையும் கொண்டு போகவில்லை என்பதை உலக மக்கள் புரிந்து கொள்ளட்டும்" என்று சொல்லியிருக்கிறார்.

ஒரு சித்தரின் கூற்றுப்படி, நம்மை தொடரப் போவது இதுதான்...

அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழியும் பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடர்வது இருவினை புண்ணிய பாவமே.


‘தன் பெண்டு, தன் பிள்ளை, தன் சோறு, தன் வீடு, தன் சம்பாத்தியம், இவையுண்டு, தானுண்டு என்போன் சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன்' என்று சமுதாயத்தின் பெரும்பாலோர் இருக்க, பொது வாழ்விற்கு நம்பிக்கை அளிக்கிறார்கள் ஆனந்த் பிரசாத்தும் கிருஷ்ணப்பிரியாவும், அவர்களின் சில நண்பர்களும்..
-----------------------------------------------------------------------
Contact:
P.Ananth Prasath - Email : ananthprasath@drcet.org Phone : +91-97313 22008
M.Krishna Priya - Email : priyarajeswari@gmail.com Phone: +91-98809 60332
URL : http://www.drcet.org/