முன்குறிப்பு : 


"பள்ளியின் வகுப்பறை
வெறும் மணல் சிமெண்ட் கலவைகளால் 
ஆன கற்கட்டிடம் அல்ல.  
அது  உணர்வுக் கலவைகளால் 
பூசப்பட்ட உயிரோவியம்"

--------------------------

எல்லா வகுப்பறைகளிலும் 
இப்பொழுது 
ஆழ்ந்த அமைதி
சூழ்ந்திருக்கும்

அறையின் சுவர்கள் 
நிசப்த அலைவரிசையில் நின்றிருக்கும்

உற்சாகத்தை நிரப்பி சென்றவர்கள்
தாங்க முடியாத வெறுமையும் 
தந்து விட்டு போயிருக்கிறார்கள்

********************

மழை வரைந்த நீர்க் கோடுகள்...
புழுதி பறந்த முன் திடல்...

டிங் டிங் டிங் எனும்
தண்டவாளத்தத்துண்டின் ஒலி அலைகள்.....

பாதம் பதிந்த இடம்...
பறவை பறந்த தடம்...

பழுப்பு  வளையத்திற்குள்
புவியீர்ப்பு விசையிலிருந்து 
விலகிச்செல்லும் 
தனி ஊசலான மனம்.....

என எண்ணற்ற 
நினைவுப் படிமங்களுடன் 
போராடிக் கொண்டிருந்தேன்

*****************

இந்தப் பூவில்...?
அந்தப் பூவில்....?
இல்லையில்லை அதோ அந்த பூவில்...?

எதிர்பார்த்த எதிலும் 
அமராது
வந்தது போலவே 
பறந்தது பட்டாம்பூச்சி 

----வகுப்பறையில் ஒரு நாள்----

K. சதீஷ்

PVKN higher secondary school ,pongalur