நீயும் மற்றுமொரு நானே

கோயில் பிரகாரம்
சுற்றி நடக்கும்
கொலுசுப் பாதங்களின்
கீழிருக்கிறது ஸ்வர்க்கம்


பூத்தொடுக்கும்
சிவந்த விரல்களில்
சிறகடிக்கிறது உயிர்

வேண்டுமென்றும்
வேண்டாமென்றும்
அலைந்து இம்சிக்கிறது
அறிவு.

பின்னிய வலைகளில்
வந்து மாட்டும் இரைக்கென
காத்திருக்கிறது
சிலந்தி.

--என்.சத்யன் -