வழியில்
மழையில் நனையும்போது
கவலைப்பட்டேன்
எங்கேனும்
நீயும் நனைகிறாயோ என்று
பிறகு உன்மேல்
பொழியும் மழைதான்
என் மேலும் பொழிகிறதென
மகிழவும் செய்தேன்
பிறகுதான் தெரிந்தது
உனக்கும் எனக்கும் பொதுவான
அந்த மழை
பெய்யவேயில்லையென்று
மழை பிடிக்கும்
என்றுதான் சொல்கிறார்கள்
கையில் குடையிருக்கும்
எல்லா பெண்களும்
-- யாரோ --
மழை....
Labels: கவிதைகள்