மனதில் பதிந்த வரிகள்...

இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க
பேருந்துக்கு வெளியே
பார்ப்பதாய்
பாசாங்கு செய்யும் நீ
என்னிடம்
எதை எதிர்பார்க்கிறாய்
காதலையா?

-- சுகிர்தராணி--

--------------------------------------

ஒருமுத்தத்தை இட்டு முடிப்பதற்குள்
ஒரு கரம்பற்றுதலின் வெம்மையை
உணர்வதற்குள்
ஒரு சரியான பிரிவுச் சொல்லைத்
தேர்ந்தெடுப்பதற்குள் நேரமாகிவிடுகிறது

- மனுஷ்யபுத்திரன்

-------------------------------------------------

ஒவ்வொரு முறை
குயில் கூவுவதை
கேட்கும் போதும்
காகங்களுக்கு
நன்றி சொல்லுங்கள்

- வெ.இறையன்பு