பிரபஞ்சத்தின் புதிர்களை
விடுவிக்கும்
விஞ்ஞானம்
வெற்றிக்களிப்பு
புதுசு புதுசாய்
புதிய புதிர்கள்
மறுபடி கிளைக்கும்
பாதைகள் ஊடே
புதிர்களும்
நெகிழ்வுகளும்
நிரடல்களும்
இறுகல்களும்
உதறல்களும்
புதிர்களுக்கும்
விடைகளுக்குமிடையில்- இருக்கும்
சுவாரஸ்யத்தில்
போகிறது வண்டி.
---ரவி சுப்பிரமணியன்---
இடையில்.....
Labels: கவிதைகள்