நுட்ப இழைகளால் ஆன
நெகிழ்ந்த மனசுக்கு
எப்படி சாத்தியமாயிற்று
துளிர வைக்கவும்
வெட்டி எறியவும்
முலைக்காம்பைத்தேடி
வாய் குவித்துத் தடுமாறும்
கண் திறக்காத நாய்க்குட்டிகளை
பிரித்துப் போடும் மனமா உனக்கு
எல்லாவற்றையும் உணர முடிகற உன்னால்
என்னை எப்படி உணர முடியாமல் போனது
விதியின் விளிம்பில்
நிறுத்திச் சிரிக்குது வாழ்க்கை
நீயென்ன செய்வாய்
பாவம்
கிணற்று நீரை
வெள்ளம் கொண்டு போகாதெனினும்
பூமியை பற்றித்தான்
பயமெனக்கு
---ரவி சுப்பிரமணியன் -
அஞ்சு கவிதைகள்
Labels: குறுங்கவிதைகள்