தண்டவாளத்துண்டு
காற்றில் ஒலியெழுப்ப
ஆரம்பம் அதன் இயக்கம்.
நீராரும் கடலுடுத்த
பாடத்தொடங்குகையில்
டியூஷன் எடுத்த களைப்பில்
கொட்டாவி விடும் வாத்தியார்கள்
மரப்பெஞ்சில் பெயர் செதுக்கி
முத்திரை பதிக்கும் மாணவர்கள்
இன்ஸ்பெக்ஸனுக்காய்
வாங்கிய கட்டுரை நோட்டு
அடுத்த மாதம் எடைக்கு வர
அட்டையுடன் காத்திருக்கும்.
பாடத்தில் இல்லாத
பாலியல் கல்வி
பாத்ரூமில்
யாரும் மெனக்கெடாமலே
வருடந்தோறும் உருவாகிறார்கள்
சில அறிவாளிகளும்
முட்டாள்களும்.
--எம்.குமார்---
பள்ளி
Labels: கவிதைகள்