யாருக்கு இல்லை
புல்லின் நுனிக்கு பனித்துளி
நத்தைக்கு அது அடங்கும் ஓடு
செடிக்கு
அதனைக் கீழிழுக்கும் பழம்
பிச்சைக்கார பெண்மனிக்கு
கழுத்தில் தொங்கும் தூளி
பள்ளிச் சிறுவனுக்குப்
பயன்படாத சிந்தனைகளடங்கிய
புத்தகப் பொதி
மலேசிய மாமாவுக்கு
மூச்சுத் திணற வைக்கும் தொந்தி
வேலை கிடைக்காத அக்காவுக்கு
மீதமிருக்கும் நாட்கள்
உன்னிப்பாகப் பார்த்தால்
உயிர் கூடத்தான்.
-- இலக்குமி குமாரன் --- ஞானத்திரவியம்
சுமை
Labels: கவிதைகள்