சிறு அறிமுகம்
நான் படித்த ரசித்த சுவைத்த கவிதைகளை மற்றும் எழுத்துக்களை, இது நாள் வரை இமெயில் மூலம் வலையுலக நண்பர்களோடு பகிர்ந்து வருகிறேன்.
நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க (?) அனைத்து கவிதைகளையும் தொகுத்து இத்தளத்தில் இட்டும், இடவும் உள்ளேன். அவ்ளோதானுங்க.....
ஆக்சிஜன் - பெயர்க்காரணம்
தொடர்ந்தாற்போல் மூன்று நிமிடங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால், மூளையின் செல்கள் உயிரிழந்து நாம் மரணத்தைச் சந்திக்க நேரிடும்.
உயிர் வாழும் வரை உடனிருக்கும் ஆக்சிஜன் போல, சில நினைவுகளும் நம்மோடு உடனிருக்கும்.
நினைவுகளை சுவாசித்தலும்... சுவாசித்தல் நிமித்தமும்.. ஆக்சிஜன்
ஏன் டிசம்பர் 16 முதல் ?
இன்றோடு நான் 30-வது முறை சூரியனைச் சுற்றி வந்து சாதனை
படைத்துள்ளேன் அதனால்...
நன்றிகள்
தன்னையே தந்து உலகத்து உயிர்களை உய்வித்து கொண்டிருக்கும் ஆக்சிஜன் வாயுவிற்கும். உந்துதலாய் இருந்த பாலைத்திணை காயத்ரி அவர்களுக்கும், சிறுசிறு உதவிகள் புரிந்த அனுசுயா அவர்களுக்கும். இலக்கிய ஆர்வத்திற்கு தூண்டுகோலாய் இருக்கும் "டைகர் செந்தில்நாதன்" அவர்களுக்கும்.
அன்புடன்
கே.சதீஷ், இடம் : கோவை மற்றும் பெங்களூர்
ஆக்சிஜன்
Labels: பொது