.......................................நேயம்....................................



நேற்றைய தூறல் கிடக்கும்
அடிதளக் குழியில்
சவ்வுக்கால் பரப்பிக்
குதித்துக் கொண்டிருந்தது தவளை

கான்க்ரீட் கலக்கியாயிற்று

அந்த சின்ன ஜீவனை
எடுத்து வெளியே போட
பத்தரையடிக் குழுயில் இறங்கப்போன
வேலைமெனக்கெட்ட சுப்பிரமணியை
நேரம் கடத்துவதாய்

கெட்ட வார்த்தையாடினான்
மேஸ்திரி.

ஒவ்வொரு சட்டி கான்க்ரீட்
வந்து விழும் போதும்
தாவிக் குதித்து
ஒதுங்கி ஒதுங்கி இறுதியாய்
சப்பாத்தி தோல் நசுங்க
பதைந்து அமைதியானது

வேலையாகிக் கொண்டிருக்கிறது
வேகவேகமாய்....

-- அமுதன் இஸ்மாயில்--