பிரிவு...

மண் பிளந்து நெல் முளைத்து
உலவர்கள் உவகை கொண்டார்
மலை பிளந்து தங்கம் கண்டார்
தேசத்தில் திண்பை வந்தது
தன்னை பிளந்து சிப்பி மிதக்க
மனிதர்கள் முத்து என்றார்
கடல் பிளந்து பாதை போட்ட
ஏசுவை கருணை என்றார்
உனைப் பிரிந்த திருநாளன்று
தரை பிளந்து பேய் மழை கொட்ட
ஜலம் பிளந்து நீயும் நானும்
போனதோர் நிகழ்ச்சி உண்டு
இருள் பிளந்து சாலை விளக்கு
எரிகின்ற ஈர இருட்டில்
என்னிருந்து உன்னைப்
பிரிந்தேன்
இது மட்டும் வலியேன் தோழி
பிரிவு தான் வாழ்க்கை என்றால்
பேசிச் சிரிததவை பொய்யா தோழி?

- பாலகுமாரன் - "ஆசை என்னும் வேதம்"