1.இருத்தல்
------------
சகியே.......
நீயிருந்த வீதி வழி
சென்றுவந்தேன்
எனைப்போலத்தான்
வாட்டமாய் தலைசாய்த்தபடி
எல்லாப் பூக்களும்
எல்லாச் செடிகளும்
எல்லா மரங்களும்
உற்றுக் கவனித்தேன்
அதன் இதழ்களை....
என்னவடி ஆச்சர்யம்
உன் இதழ்தொடாத
என் உதடுகளைப் போலவே
உணர்வற்று... உயிரற்று...
எல்லாமும்.
2. காதல்
------------
சகியே........
நின்று பார்க்கையில்
நடந்து போகையில்
படுத்துக் கிடக்கையில்
படித்துச் சுவைக்கையில்
சுகப்படும் வேளையில்
சோகப்படும் சூழலில்
நீ வேண்டும் என்னருகில்....
வேறெப்படிச் சொல்ல
என் காதலை..உன்னிடம்....
3.விதி
-----------
விதியால்.........
என்று சொல்வதைத் தவிர
வேறு என்ன சொல்லி
எழுதிட முடியும்
உன் பிரிவை....
இந்த காகிதங்களில்.
தென்றல்.இரா.சம்பத்
இருத்தல்.. காதல்.. விதி
Labels: கவிதைகள்