அவசரமாக ஒரு வேலையாக சென்று கொண்டிருக்கிறீர்கள். வழியில் ஒரு ஓடை குறுக்கிடுகிறது. அதில் வாத்துக்கூட்டம் அழகாக நீந்த, தூரே புல்வெளியில் சில வெள்ளைக்கொக்குகள் நின்று எழுந்து சிறகடித்துப் பறக்க, பின்னணியில் ஆரஞ்சு வானம், வண்ண வண்ண மலர்கள்... அற்புதமான காட்சி. ஆனால் நின்று ரசிக்க நேரமில்லாமல் ஓடுகிறீர்கள். எதை இழந்து விட்டு, எதை பிடிக்க அந்த ஓட்டம்?.. நாம் எல்லோரும் செய்வதுதான் இது. ராபர்ட் ஃப்ராஸ்டின் " Stopping by Woods on a Snowy Evening " என்கிற அற்புதமான கவிதையை கொஞ்சம் மொழி பெயர்த்துக் கீழே தந்திருக்கிறேன்.
பனி பெய்த ஒரு மாலை நேரம்
"கிராமத்தின் உள்ளே அவன் வீடு இருக்கலாம்
அவன் வயல் பனியில் நனைவதை
அதை நான் நின்று பார்ப்பதை
அறிய மாட்டான் இந்த இனிய பனிப்பொழுதில்.
நின்றுவிட்ட என்குதிரை புரியாமல் பார்த்தது
'அருகிலேதும் இல்லையே பண்ணை வீடு?'
வயலுக்கும் உறைந்த ஏரிக்கும் நடுவே
வருடத்தின் மிகுந்த கரும்மாலை இதுதான்.
எதற்காக நின்று விட்டாய்? கேட்டது என் குதிரை
கழுத்து மணி கலகலக்க.
எளிய காற்றும் பனி சிறகு தரும் ஓசையும்
வேறெதுவும் சப்தமில்லை,
குதிரையின் கழுத்து மணி சப்தம் தவிர.
அடர்ந்து இருள் படர்ந்து அழகாய் இருக்குது காடு
நான் கொடுத்த வாக்குகள் உண்டு காப்பதற்கு
கடந்து போக வேண்டும் உறங்கும் முன்
இன்னும் பல காதம் கடந்து போக வேண்டும்"
Stopping by Woods on a Snowy Evening - By Robert Frost
Whose woods these are I think I know.
His house is in the village though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.
My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.
He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound's the sweep
Of the easy wind and downy flake.
The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
இயற்கையை ரசிக்க கூட நேரமில்லாமல் ஓடும் மனிதனைப் பற்றிய விவரிப்பு மட்டும் இதன் நோக்கம் கிடையாது. இதன் அர்த்தம் இன்னும் விஸ்தாரமானது. நமக்கெல்லாம் சந்தோஷமான வாழ்க்கை நடத்த அத்தனை விவரமோ, அவகாசமோ, கவிதை மனசோ, விசாலமான எண்ணமோ கிடையாது. யோசித்து பாருங்கள்...
- கிருஷ்ணா டாவின்ஸி
பனி பெய்த ஒரு மாலை நேரம்
Labels: கட்டுரைகள்