கூடம் நிறைந்திருந்த
சிலை
செதுக்கி முடிக்கப்பட்டது
விலை தந்தவர்கள்
எடுத்துக்கொண்டு
வெறுமையும் தந்துவிட்டு
போனார்கள்
தெருவாசல்
நடையோடம்
முற்றம்
என்று நிறைந்திருந்த
கல்யாணப் பந்தலை
அக்கா மறு வீடு போனதும்
பிரித்துப் போனார்கள்.
பட்டாசல்
முங்கிக்கிடந்த
பால இருள் அகன்று
பழைய வெளிச்சம் மறுபடி
வந்தது
ஆனாலும்
அம்மா அப்பாவின்
முகத்தில்
ஏனோ சோக நிழல்
கிராமத்து பஸ் ஸ்டாப்பில்
தனியே கிடக்கிறது
கடைசி பஸ்
இறக்கிப் போட்டுவிட்டுப்
போன
டூரிங் டாக்கிஸுக்கான
படப்பெட்டி.
யெனப் படிமங்களுடன்
போராடிக் கொண்டிருந்தேன்.
இந்தப் பூவில்...?
அந்தப் பூவில்...?
எதிர்பார்த்த எதிலும்
அமராது
வந்தது போலவே
பறந்தது பட்டாம் பூச்சி
--கலாப்பிரியா--
தொடங்கின நாளிலிருந்து....
Labels: கவிதைகள்