நெய்தல் - தலைவி கூற்று
நள்ளென்று அன்றே யாமம் சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே. - பதுமனார்.
இரவு பாதி முடிந்து விட்டது .
வார்த்தைகள் பேசப்படாமல் ,
மக்கள் அமைதியாக உள்ளனர்,
வஞ்சனை நீங்கி ,
இந்த பரந்து விரிந்த உலகமும் உறங்குகிறது.
நான் மட்டும் தான்
விழித்துக்கொண்டு இருக்கிறேன்
- நன்றி - பழனியப்பன் வைரம் -- http://karkanirka.wordpress.com
குறுந்தொகை
Labels: இலக்கியம்