தீண்டல்...

இரண்டு பெஞ்சுகளின் இடைவெளியில் எதிரெதிர்
வரும்பொது என்னை உரசலாம் கொஞ்சம்

நெருக்கும் பஸ்ஸில் கூட்டத்தில் அலைக்கழித்து
ததும்பும்போது என் மீது படலாம்

காற்று படுத்திருக்கும் காரிடாரில் நடக்கையில்
வீசி நடக்கும் கையை என்மேல் வீசலாம்

இருண்ட நூலகத்தில் புத்தகங்களை
மேலடுக்கில் தேடுகையில் என் தோளை இடிக்கலாம்

எக்ளேர்சோ பாப்பின்ஸோ எனக்கென தருகையில்
உரிமையெடுத்து உள்ளங்கையில் அழுத்தலாம்

சட்டையில் ஏதோ பூச்சி எனக் கத்தும்
பயந்தாங்கொள்ளியே நீயே அதைத் தட்டலாம்

வெள்ளை பேஸினில் டெஸ்ட் ட்யூப் கழுவும் போது
உன்கைகள் என்னோடு கலக்கலாம்

கோயில் பிரசாதத்தைத் தாமரை உள்ளங்கயில்
ஏந்தி நீட்டி சிரிக்காமல் என் நெற்றியில் இடலாம்

கேலி பேசி உன்னை நான் அழவைக்கும்போது
செல்லமாய் கண்டித்து என் நெஞ்சிலே குத்தலாம்

தோழிகளிடம் முகப்படுத்தி வைக்கையில்
மணிக்கட்டை தொட்டு உரிமையுடன் சொல்லலாம்

இத்தனை வாய்ப்புகள் இருந்தும்
இதையெல்லாம் விடுத்து எங்கோ இருக்கும் என் இதயத்தை
அழுத்தமாய் தொட்டது ஏனடி தோழி....?

-- கிருஷ்ணன்